இணுவில் பொதுநூலகத்தின் சமூகச் செயற்பாடு: வாழ்வாதார உதவிகள் கையளிப்பு(Photos)

இணுவில் பொதுநூலகத்தின் கனடா அமைப்புக் குழுவினரின் நிதி அனுசரணையுடன் இணுவில் பொதுநூலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூகநலத் திட்டத்திற்கு அமைய வாழ்வாதார, கல்விக்கான ஊக்குவிப்புத் திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இம்மாத வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் மேற்படி பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பயனாளி ஒருவருக்குத் தையல் இயந்திரம் கையளிக்கப்பட்டதுடன் மற்றொரு பயனாளிக்குக் கோழி வளர்ப்பதற்கான உதவித் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, மூன்று மாதத்திற்கு ஒரு தடவை குறித்த செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)