வேலணையில் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு(Photos)

தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.வேலணை வங்களாவடிச் சந்தியில், வேலணைப் பிரதேச சபையின் முன்பாக அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபியடியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(15.9.2022) முற்பகல்-11 மணியளவில் தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வர் து.ஈசன், தமிழ்த்தேசியப் பண்பாடடுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், வேலணைப் பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செ. பார்த்தீபன், தங்கராணி, யசோதினி, பிரகலாதன், சிறீபத்மராசா, வசந்தகுமாரன், அசோக்குமார் , பிலிப் பிரான்சிஸ், ஊர்காவற்துறைப் பிரதேச சபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற்(சின்னமணி), கனகையா மற்றும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர்களான குயிலன், கந்தசாமி உட்பட நூற்றுக்குமேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)