நல்லூர் வர்த்தக நிலையத்தில் கட்டாக் காலி மாடொன்றின் திடீர் செயல்!

திருநெல்வேலி சிவன்-அம்மன் வீதியும் கோயில் வீதியும் சந்திக்கும் சந்தியான நல்லூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் முன்பாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை வீதியால் சென்ற கட்டாக் காலி மாடொன்று திடீரென நிலத்தில் இழுத்து விழுத்தி நாசம் செய்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை(21.9.2022) காலை-08.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தில் நின்றவர்கள் கட்டாக் காலி மாட்டை விரட்ட முயன்ற போதும் சில நொடிகளுக்குள் ஒருதொகுதி மரக்கறிகளை இழுத்து விழுத்தி நாசம் செய்துள்ளது. இதனால், மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளருக்குப் பல ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)