திருநெல்வேலியில் ஞாயிறன்று இரத்ததான முகாம்

சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு எதிர்வரும்-25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-8.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை மேற்படி நிலைய மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

தாங்கள் வழங்கும் இரத்ததானம் பல நோயாளர்களின் உயிர்களைக் காக்க வல்லது. நோயாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் இரத்ததானம் வழங்குவோம். விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க வல்ல எமது இரத்த தானம் செய்யும் இச் சேவையிலும் கலந்து கொள்வோம். இரத்த தானத்தின் மூலம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)