யாழ்.இந்துக் கல்லூரியில் நாளை குருதிக் கொடை முகாம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருதிக் கொடை முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(24.9.2022) காலை-9 மணி முதல் மேற்படி கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் குருதிக் கொடை முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)