நயினாதீவு கணேச வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு(Photo)

இத்தாலி மனிதநேயச் சங்கத்தின் நிறுவுனர் ம.கிருபாகரனின் புதல்வி செல்வி.கிருபாகரன் யதுசிகா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை நயினாதீவு கணேச மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும், சமூக சேவகருமான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஊடாக மேற்படி பாடசாலைக்கு வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வு அண்மையில் குறித்த பாடசாலையில் இடம்பெற்றிருந்தது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)