'அலங்காரக் கந்தன்' எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு குமாரவாசல் ஸ்ரீ குமார கோபுரம் கலசாபிஷேகம் நல்லைக் கந்தன் பெருந் திருவிழாவின் திருக்கார்த்திகை உற்சவ நன்னாளான இன்று வெள்ளிக்கிழமை(19.8.2022) காலை-6 மணிக்கு வெகுசிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டபப் பூசை வழிபாடு, விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத்...
யாழ்.கோப்பாய் வடக்கு ஸ்ரீசக்கராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழாவும் உறியடி உற்சவமும் நாளை சனிக்கிழமை(20. 8.2022) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. நாளை காலை-6.30 மணிக்கு காலைப் பூசை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து காலை-8.30 மணியளவில் சக்கராழ்வார் சித்திரத் தேரில் எழுந்தருளும் திருக்காட்சியும் இடம்பெறும். மாலைப்...
'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான யாழ்.ஏழாலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நாளை சனிக்கிழமை(20.8.2022) சிறப்பாக நடைபெற உள்ளது. நாளை மாலை-4.30 மணியளவில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத வெங்கடேசப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் பூசைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பிரான் வீதி உலா வரும்...
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலய கிருஷ்ண ஜெயந்தி திருவிழா நாளை சனிக்கிழமை(20.8.2022) சிறப்பாக இடம்பெற உள்ளது. முற்பகல்-11 மணிக்கு அபிஷேகம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மாலை-6 மணிக்கு வசந்தமண்டப பூசையும் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பெருமான் திருவீதி உலா வந்து ஆலய வடக்கு வீதியில் உறியடி உற்சவமும் நடைபெறும். (செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்) ...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு குமாரவாசல் ஸ்ரீ குமார கோபுரம் கலசாபிஷேகம் இவ்வாலயப் பெருந் திருவிழாவின் திருக்கார்த்திகை நன்னாளான நாளை வெள்ளிக்கிழமை(19.8.2022) காலை-6 மணிக்குச் சிறப்பாக இடம்பெறும். (செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)
ஈழத்துச் சித்தர் குடையிற் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.8.2022) யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடையிற் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் இடம்பெறும். நாளை காலை-08 மணி முதல் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகளும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்....
யாழ்.திருநெல்வேலி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை(19.8.2022)மாலை-3.50 மணி முதல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வுகள் நடைபெற உள்ளது. பிரசாந்திக் கொடியேற்றம், ஓம்காரம், சாயி காயத்ரீ, வேதபாராயணத்துடன் ஆரம்பமாகும் குறித்த நிகழ்வில் கிருஷ்ணார்ப்பணம் காணொளி ஒளிபரப்பு, கிருஷ்ண கீர்த்தனம் இசை அர்ப்பணம் நிகழ்வு, கிருஷ்ணாஞ்சலி நடனம், கிருஷ்ண லீலை நாடகம், பஜனை,...
யாழ்.தெல்லிப்பழை மகாதனை கோணாசீமா நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை மறுதினம்-19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-5 மணிக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்தும் 12 தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற உள்ளதுடன் 12 தினங்களும் மாலை-5 மணிக்கு ஆரம்பமாகி அபிஷேகம், பூசை, வைரவப் பெருமான் திருவீதி உலா...
யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.8.2022) கிராம ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றது. நேற்றுக் காலை மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற அபிஷேகம், பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை-9.30 மணியளவில் ஆலய முன்றலிலிருந்து அடியவர்களின் அரோகராக் கோஷத்துடன் விநாயகப் பெருமானின் கிராம ஊர்வலம் ஆரம்பமானது. அடியவர்கள் தங்கள் இல்ல வாசல்கள் தோறும் பூரண...
யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(10.8.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. https://www.youtube.com/watch?v=u8Ikig0zS_s இன்று காலை அபிஷேக பூசை, வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி முத்தேர்களிலும் எழுந்தருளினர். சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டு...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்