Home ஆன்மீகம்

ஆன்மீகம்

கனடா இந்துசமயப் பேரவையின் பீடாதிபதியும், குப்பிளான் மண்ணின் மைந்தருமான சிவமுத்துலிங்கம் ஆற்றும் பணியை நினைவுபடுத்திச் சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தால் வெளியிடப்பட்ட ‘சைவத்தமிழ் திருமுறையழகு’ மலர் அறிமுக விழா நேற்றுச் சனிக்கிழமை(29) பிற்பகல் யாழ்.குப்பிளான் தெற்கு சிவபூமி ஞான ஆச்சிரம முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தினர் வழங்கிய விசேட பஜனை நிகழ்வு...
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது. துர்க்காதேவியின் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆலயத்தை நோக்கிப் பல எண்ணிக்கையான பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள், செதில் காவடிகள் என்பன ஆலயத்தை நோக்கி வரிசையாக வந்து கொண்டிருந்தன. வரலாற்றுப்...
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து...
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையின் திறப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல்-04 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளதுடன் திருவாசக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை மறுதினம்...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை(25) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பெருமளவான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதஸ்டை, தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் மற்றும் செதில் காவடிகள் என்பன எடுத்தும்,...
நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 2019 புதுவருடம் விளம்பி ஆண்டு மார்கழி மாதம் 17 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை (01.01.2019) கிருஷ்ண பக்ஷத்து தசமித் திதியும்,ஸ்வாதி நட்சத்திரம், சுகர்ம யோகம்,சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அதிகாலை 00.01 மணிக்கு 2019 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமொன்று கடந்த சில தினங்களாக மலர்களால் அம்பாளுக்குப் பூசை செய்து வருவது பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகமொன்று தனது வாயால் மலர்களை எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களால் அழகாக அர்ச்சிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) சிறப்பாக இடம்பெற்றது. கொளுத்தும் வெயிலில் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் தோறும் தாகசாந்தி நிலையங்கள்...
யாழ்.குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை(28) சிறப்பாக நடைபெற்றது. தேர் வீதியுலா பவனி வரும் வேளையில் ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், பறவைக் காவடிகள் எடுத்தும், செதில் காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் கற்பூரச்சட்டிகள் ஏந்தியும், பாற்காவடிகள் எடுத்தும், அடியளித்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன்...
யாழ்.காரைநகர் முகப்பில் நூற்றாண்டு கண்ட காரை சைவ மகா சபையின் செயற்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட சிவபெருமான் சிலை அமைக்கும் பணி நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் பாலச்சந்திரன் செய்த முறைப்பாட்டையடுத்து சிவன் சிலை அமைக்கும் பணிகளை பொலிஸார் இன்று(30) இடைநிறுத்தியுள்ளனர். இதேவேளை,...
2,395FansLike
40FollowersFollow
439SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்