இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு இணுவில் பொதுநூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(12.4.2022) மேற்படி நூலக கலாசார மண்டபத்தில் மூளையை விருத்தியாக்கும் சதுரங்கச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
https://youtu.be/iOwO1uLFE5I
நேற்றுக் காலை-08.45 மணிக்கு ஆரம்பமான மேற்படி போட்டிகளில் 235 மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
பாடசாலை மாணவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இந்தப்...
இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற ஏற்பாடாகி கடந்த வாரம் பிற்போடப்பட்ட சதுரங்கச் சுற்றுப் போட்டி-2022 நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(12.4.2022) காலை-7.30 மணியளவில் நூலக கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டி பாடசாலை மாணவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடாத்தப்படவுள்ளது.
இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் நாளை திங்கட்கிழமைக்கு(11.04.2022) முன் விண்ணப்பப் படிவங்களை நூலகத்தில்...
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய 70 ஆவது உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்றது.
குறித்த போட்டி நிகழ்ச்சி போர்ட்டோ ரிகாவின் சான் ஜுவான் எனும் இடத்தில் உள்ள கோகோ கோலா மியூசிக் ஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் குறித்த...
தெல்லிப்பழை கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் றோகான் வலைப்பந்துப் பயிற்சிக் கூட அங்குரார்ப்பண நிகழ்வு-2022 நாளை வெள்ளிக்கிழமை(18.3.2022) பிற்பகல்-3.30 மணிக்குத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)
யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய அணிகள் மோதும் "வடக்கின் 105 ஆவது பொன் அணிகளின் போர்"(துடுப்பந்தாட்டப் போட்டி) நாளை வெள்ளிக்கிழமை(11.3.2022), நாளை மறுதினம் சனிக்கிழமை(12.3.2022) ஆகிய தினங்களில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இவ்வருடப் பொன் அணிகளின் போரில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு ஆ.டெஸ்வினும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு...
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் திடீர் மாரடைப்பால் தனது 52 ஆவது வயதில் இன்று(4) காலமானார்.
அவர் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1969 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்-13 ஆம் திகதி அவுஸ்திரேலி...
ஈழ ஊடகத் துறையின் அடையாளமாகவும், மூத்த ஆளுமையாகவும் விளங்கிய மூத்த ஊடகவியலாளரும், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதன் இன்று திங்கட்கிழமை(22.11.2021) அதிகாலை நல்லூரில் தனது 79 ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
யாழ்.வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ம.வ.கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம்-...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(16.11.2021) காலை-09 மணியளவில் ஆரம்பமானது.
"பன்முக நோக்கில் சங்க இலக்கியம்" எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமான குறித்த ஆய்வு மாநாடு இன்று புதன்கிழமையும்(17.11.2021)...
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை (12) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் "Thidal Project" ஊடாக புனரமைக்கப்பட்ட விளையாட்டுத்திடல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள...
கொழும்பு வெஸ்லி கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியை திருமதி. டெய்ஸி பற்றிமா மனோகரன் கடந்த 09.09.2021 அன்று கொழும்பில் காலமானார். அம்மையார் காலமாகி இன்று செவ்வாய்க்கிழமையுடன்(09.11.2021) 60 நாட்களாகின்றன.
09.08.1951 இல் யாழ்.ஏழாலை மத்தியில் அருளப்பு ஞானம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியாகப் பிறந்த இவர் தனது இளமைக் காலத்தில் இளமைத் துடிப்பும், கல்வியறிவும் மிக்கவராகத்...