தீப- ஆவளி என்றாலே தீப வரிசை என்று அர்த்தம். தீபாவளித் திருநாள் ஏழை, எளியவர்களை அரவணைக்கின்ற, வசதி படைத்தவர்கள் வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்து ஈகைத் தன்மையை வளர்ப்பதற்காகவும், உயிர்களுக்குப் பாதகம் செய்யாத சாத்வீகமான திருநாளாகவும் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். இதன் மூலம் நாங்களும் மகிழ்ந்து, ஏனைய உயிர்களும் மகிழும் படியான சாந்தி,...
யாழ்.மாவட்ட சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நிழற்குடைத் திறப்பு விழாவும், மூக்குக் கண்ணாடி வழங்கல் வைபவமும் இன்று சனிக்கிழமை(20-10-2018) முற்பகல் கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. சமூக அபிவிருத்தி மன்றத் தலைவர் ரி. குமாரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகவும்,...
அண்மையில் வெளியாகிய தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனான தசீகரன் கவிவாணன் 176 புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மேற்படி பாடசாலையில் இவ்வருடம் எட்டு மாணவர்கள்...
ஆசிரியர்கள் இந்த உலகத்தின் அச்சாணிகள். இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமெனில் ஆசிரியர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களின் பங்கு தேவையாகவிருந்தாலும் ஆசிரியர்களின் பங்கு அபரிதமானதாகத் தேவையானதொரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என மூத்த இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபருமான கவிமணி க. ஆனந்தராசா(அன்னைதாஸன்) தெரிவித்துள்ளார்....
யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை(04) பிற்பகல் விமரிசையாக இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் க. காராளசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளரும், ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகருமான உலகநாதர் நவரட்ணம் பிரதம விருந்தினராகவும், மேல்மாகாண ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகரும், குப்பிளான்...
எனது வருங்கால இலட்சியம் வைத்தியராக உருவாகுவதாகும். வைத்தியராக உருவாகி ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதை நான் இலட்சியமாகக் கொண்டுள்ளேன். நான் வளர்ந்த பின்னர் கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னாலான பண உதவிகளையும் வழங்குவதோடு வைத்திய சேவைகளையும் செய்ய ஆவலாகவுள்ளேன் என தரம்-05 புலமைப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் முதலிடம்...
யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள தட்டாதெருச் சந்தியையும், கந்தர்மடம் சந்தியையும் இணைக்கும் முக்கிய வீதியான அரசடி வீதியின் ஒருபகுதியில் அதிக மழை வெள்ளநீர் தேங்கி நிற்கின்றமையால் குறித்த பகுதி மக்களும், வீதியால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி வீதி யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய வீதியாக...
முதியோரைக் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச முதியோர் தினம் இன்று(01) உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைக் கருத்தில் கொண்டு தான் முதியோருக்கான தனித் தினமும், சிறப்புத திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இன்றைய சூழலில் முதியோருக்கான சுதந்திரம், பங்களிப்பு, வயதில் மூத்தவர்களை மதித்தல் போன்றவற்றை...
புரட்டாதி மாதப் பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மஹாளய பட்சமாகும். இன்றைய தினம் மஹாளய பட்சம் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள்...
தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(23) காலை-09.30 மணி முதல் யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் அண்மையிலுள்ள திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்று வருகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பெருமளவான...
2,395FansLike
40FollowersFollow
262SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்