பனை அபிவிருத்திச் சபை ஆரம்பித்து இன்றுடன் (07) நாற்பத்தியொரு வருடங்கள் ஆகின்றன. இதனை வாழ்த்தி வழங்கும் கவிதை, நாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை அன்புடன் அறிபவர்க்கு ஏடு தந்தாய் ஆற்றாத பசி போக்க அறுசுவை உணவு தந்தாய். இல் வாழ்வதற்கு குடிசை தந்தாய் ஈகையில் நீ உயர்ந்து நின்றாய். உயர்ந்து வளர்ந்து நின்று ஊர் மக்களைக் காத்து நின்றாய். எம்மவர் மனந்தனில்...
ஒயிலாய் குறத்தி ஒருபக்கம் வேழ மயிலாள் மறுபக்கம் ஆறுமுகங்களுடைய அழகு திருக்குமரனாய் மயக்கும் மாலை வேளையில் மணவாளக் கோலத்தில் துள்ளி வரும் வேலுடன் புள்ளி மயில் வாகனத்தில் அசைந்தாடி வரும் உன் அழகைக் காண கண்களிரண்டும் போதாது கார்த்திகேயனே! காணக் கண் கோடி வேண்டும் கந்தவேள் பெருமானே! வள்ளி மணவாளனே!! உள்ளம் கவர் கள்வனே!! தள்ளி நின்றது...
காலத்தால் அழியா கானமிசைக்கின்றோம் முருகா கோலக் குறத்தியுடன் வருவாய் குருநாதா! தீர்த்தமாடும் திருநாளாம் இன்று குமரா அடியார்கள் ஆயிரமாயிரமாய் குவிகின்றார் ஆலயச் சூழலெல்லாம் வருவாய் மயிலேறி வள்ளி தெய்வயானையுடன் முருகா குருவாக வந்து காட்சி தருவாய் குருநாதா தருவாய் உனதன்பு திருவடி குகநாதா மருவும் அடியார் மனங்குளிர காட்சி தருவாய் குகனேசா! நாவலர் போற்றிய நல்லூரின் நாயகா முருகா காவலர் தானென்றே...
நல்லூரிலே நின்றாடிடும் வடிவேலனே முருகா எல்லோரதும் வினை தீரவே விரைந்தோடி வா முருகா சரவணப் பொய்கையில் உதித்தவனே அரவணைத் தாண்டிடும் அற்புதனே ஆரமுதே எங்கள் அழகனே வா (நல்லூரிலே நின்றாடிடும்......) வள்ளி மாணாளனே வாருமையா வருந்திடும் எங்களைப் பாருமையா அருள் மழை தாருமையா (நல்லூரிலே நின்றாடிடும்......) கருணைக் கடலே கதிர் வேலா அருண கிரியின் குரு நாதா தருணம் இது உன் அருளைத் தா (நல்லூரிலே நின்றாடிடும்......) தேரடிச் சித்தர்கள் போற்றிய வேல் தேவருந் தேடிடுந்...
ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்… நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்… பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்… அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்… என் நான்கு கால்களும் இரண்டு கைகளும் பணிவிடைகள் செய்தே அசந்து போயின… ஊதியமின்றி உழைத்தது அவர் என் மீது வைத்த கரிசனம் நான் அவர் மீது கொண்ட விசுவாசம்.. இருந்தாலும் அவரின் முதுமையையும் நோயையும் நன்கு அறிந்து செயல்பட்டதால்… எனக்கு...
கொடியேற்றம் காணும் குப்பிளான் உறை சோதிவிநாயகனே!- உம் பாதம் பணிந்தேற்றுகின்றோம் சீரிய கல்வி, செல்வமும் சிறக்க சிரம் தாழ்த்திப் பணிந்தேற்றுகின்றோம் சித்திகள் பல தந்து காத்திடையா! சொற்பதங் கடந்தவனே!எங்கள் சோதிவிநாயகனே! மகா செந்திநாதையர் பூசித்த மாசில்லாத் தூயவனே! விண் முட்டும் இராஜகோபுரத் திருப்பணியை இனிதே நிறைவேற்றிய உன் அற்புத மகிமையை என்னவென்பேன்? உன் புகழைப் பாடச்...
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம் பத்துமாதம் கருவில் சுமந்து -எம்மைப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பவள் தாய் என்றால் நாளெல்லாம் எம்மை நெஞ்சில் சுமக்கும் உத்தமர் தந்தை அவரின்றேல் நாங்களில்லை அவர் தியாகத்துக்கு என்றுமே எல்லையில்லை தந்தையைப் போற்றுவோம் தரணியெங்கும் தந்தையர் பெருமையை என்றென்றும் பறைசாற்றுவோம் {உலகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கவிதை வெளியிடப்படுகின்றது} கவியாக்கம்:-செ.ரவிசாந்-(குறிஞ்சிக்கவி)
அந்த முதலாம் நாள் ஆளுக்கொரு திசையிலிருந்து நீதி கோரி சாத்வீக பயணம்...! (கச்)சேரியில் கூடி உறக்கம் தொலைத்து உணர்வுகள் மோதி அலை கடலென திரண்டோம்...! ஆணுக்கு இங்கே பெண்ணும் நிகரென பட்டினி கிடந்தும் பனியில் உறைந்தும் வேள்வி செய்தோம்...! பந்தலமைத்தோம் பச்சை தண்ணீரை ஆகாரமாக்கினோம் பிச்சையேந்தவில்லை தொழில் உரிமை வேண்டினோம்....! எண் புறமும் செய்தி பறந்தது சமூக வலைத்தளம் பற்றி எரிந்தது நம் மரபணுவில் கலந்திட்ட வீரத்துடன் சோரம் போகாது சோர்வடையாது பல் தூரம் சென்றோம்.... அடிவருடிகள் நெஞ்சில்...
ஐம்பூதங்களும் ஐம்புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்..! தூத்துக்குடியில் எம் தமிழ்க் குடி குடிசையில் வாழ்ந்தாலும் குதூகலமாக வாழ்ந்தார்கள் ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்...! நீர் நிறம் மாறியது நிலம் மலமாகியது தீ பெருந்தீயாகியது காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது ஆகாயம் புகைமூட்டமாகியது ஐம் பூதங்களும் ஐம் புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்...!!! நீதிக்காக போராடியவர்களுக்கு அநீதியே தீர்வு...! ஏய் காவல் துறையே என் இனம் மீது உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை...! ஏய் ஹிந்தியமே உன் பசிக்கு பலியான அந்த அக்காவும் அண்ணாவும் மூச்சுப் போகும் தருணத்தில் கூட உங்கள்...
பொழுதுகள் புலர்கின்றன நாட்கள் நகர்கின்றன நமது நம்பிக்கைகளில் நகர்வுகள் எதுவுமில்லை இல்லை' எனும் வார்த்தை இங்கு எல்லோர்க்கும் சொந்தம் போர் ஓய்ந்தது போர் தந்த வடுக்கள் இன்னமும் ஓயவில்லை ஏக்கங்கள் எம் வாழ்வில் என்றும் குட்டிபோடும் குடிசைகள் என்றுமெம் நிரந்தர வசிப்பிடங்கள் புனர்வாழ்வு எனும் பெயரில் நிதம் புதைகுழியில் அகதிகள் போர்வையில் அரைகுறை நிம்மதியும் அந்தர அழிவுதனில் வேடம் வெளுக்கிறது வெறுவாய்கள் மெய்க்கிறது பாழ்பட்ட சனமெல்லாம் பட்டினியால் சாகிறது வேதனைத் துவானமெங்கும் விடாமல் பொழிகிறது (கவியாக்கம்:- குறிஞ்சிக்கவி-)
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்