'அலங்காரக் கந்தன்' எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு குமாரவாசல் ஸ்ரீ குமார கோபுரம் கலசாபிஷேகம் நல்லைக் கந்தன் பெருந் திருவிழாவின் திருக்கார்த்திகை உற்சவ நன்னாளான இன்று வெள்ளிக்கிழமை(19.8.2022) காலை-6 மணிக்கு வெகுசிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடு, விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத்...
யாழ்.கோப்பாய் வடக்கு ஸ்ரீசக்கராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழாவும் உறியடி உற்சவமும் நாளை சனிக்கிழமை(20. 8.2022) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.
நாளை காலை-6.30 மணிக்கு காலைப் பூசை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து காலை-8.30 மணியளவில் சக்கராழ்வார் சித்திரத் தேரில் எழுந்தருளும் திருக்காட்சியும் இடம்பெறும்.
மாலைப்...
'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான யாழ்.ஏழாலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நாளை சனிக்கிழமை(20.8.2022) சிறப்பாக நடைபெற உள்ளது.
நாளை மாலை-4.30 மணியளவில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத வெங்கடேசப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் பூசைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பிரான் வீதி உலா வரும்...
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலய கிருஷ்ண ஜெயந்தி திருவிழா நாளை சனிக்கிழமை(20.8.2022) சிறப்பாக இடம்பெற உள்ளது.
முற்பகல்-11 மணிக்கு அபிஷேகம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மாலை-6 மணிக்கு வசந்தமண்டப பூசையும் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பெருமான் திருவீதி உலா வந்து ஆலய வடக்கு வீதியில் உறியடி உற்சவமும் நடைபெறும்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்) ...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தினால் நேற்று முன்தினம் புதன்கிழமை(17.8.2022) காலை ஹிந்தி மொழிக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வகுப்பின் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன், யாழ்.இந்தியத் துணைத் துணைத் தூதரக அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் எனப்...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு குமாரவாசல் ஸ்ரீ குமார கோபுரம் கலசாபிஷேகம் இவ்வாலயப் பெருந் திருவிழாவின் திருக்கார்த்திகை நன்னாளான நாளை வெள்ளிக்கிழமை(19.8.2022) காலை-6 மணிக்குச் சிறப்பாக இடம்பெறும்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)
கோண்டாவில் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் இணுவில் அண்ணா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் அண்ணா முன்பள்ளியின் விளையாட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை(19.8.2022) பிற்பகல்-2 மணியளவில் மேற்படி நிலைய முன்றலில் இடம்பெற உள்ளது.
அண்ணா சனசமூக நிலையத் தலைவர் சு.காந்தரூபன் தலைமையில் நடைபெறும் மேற்படி விளையாட்டு விழா நிகழ்வில் முன்னாள் வடக்கு...
ஈழத்துச் சித்தர் குடையிற் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.8.2022) யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடையிற் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் இடம்பெறும்.
நாளை காலை-08 மணி முதல் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகளும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்....
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்(சூழகம்) செயலாளர் கருணாகரன் நாவலனின் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரத்தினைச் சேர்ந்த அமரர்.திருமதி.இரட்ணம் பரமேஸ்வரியின்(பாக்கியம்) 31 ஆவது நினைவு நாளினை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் யாழ்.புங்குடுதீவில் வாழ்கின்ற 25 முதியவர்களுக்கு சத்துணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் நேற்றுப் புதன்கிழமை(17.8.2022) வழங்கிவைக்கப்பட்டன.
இதேவேளை,...
யாழ்.திருநெல்வேலி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை(19.8.2022)மாலை-3.50 மணி முதல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
பிரசாந்திக் கொடியேற்றம், ஓம்காரம், சாயி காயத்ரீ, வேதபாராயணத்துடன் ஆரம்பமாகும் குறித்த நிகழ்வில் கிருஷ்ணார்ப்பணம் காணொளி ஒளிபரப்பு, கிருஷ்ண கீர்த்தனம் இசை அர்ப்பணம் நிகழ்வு, கிருஷ்ணாஞ்சலி நடனம், கிருஷ்ண லீலை நாடகம், பஜனை,...