இன்று செவ்வாய்க்கிழமை(24.5.2022) அதிகாலை-3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது. இதற்கு அமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும்,...
யாழ்.குடாநாட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த சில தினங்களாக மக்கள் இரவு, பகலாக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். https://youtu.be/gyi-aAeFLgo இந்நிலையில் இன்று திங்கட்கிழமையும்(23.5.2022) அதிகாலை, காலை வேளையில் மாத்திரமன்றி மதிய வேளையிலும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் யாழில் பல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மோட்டார்ச் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில்...
யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும்...
அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் எட்டு அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை(23.5.2022) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கடற்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)
யாழ்.மாவட்டத்தில் தக்காளியின் விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது. https://youtu.be/epJunEWJ29M யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) ஒரு கிலோ தக்காளியின் விலை 950 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 700 ரூபா முதல் 800 ரூபா வரை திருநெல்வேலிச்...
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் பரீட்சையினை எவ்விதத் தடையுமின்றி நடாத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்துப் பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பரீட்சையில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) நடைபெற்ற...
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடம் இன்று சனிக்கிழமை (21.5.2022) மாலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு மேற்படி நினைவிடத்தைச் சுத்தம் செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (செ.ரவிசாந்)
யாழ்.இராட்சியத்தின் இறுதித் தமிழ்த்தேசிய சைவ மன்னன் மாவீரன் இரண்டாம் சங்கிலியனின் 403 ஆவது சிரார்த்த தின விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) யாழில் சங்கிலிய மன்னன் நினைவு தினக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. காலை-9 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள இரண்டாம் சங்கிலிய மன்னனின் உருவச் சிலையடியில் அஞ்சலி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை, இலங்கையின் 25...
சுழிபுரம் மேற்குப் பாரதி கலைமன்றத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) காலை-9 மணி தொடக்கம் பிற்பகல்-2 மணி வரை சுழிபுரம் மேற்குப் பாரதி கலைமன்றத்தின் முன்பள்ளி மண்டபத்தில் நடைபெறும். மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம்...
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு வசதியாக எதிர்வரும்- 22 ஆம் திகதி முதல் ஜீன்-1 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, மே-22 மற்றும் 29 ஆம் திகதிகளில் மின்வெட்டு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே-22 முதல் ஜூன்-1 ஆம் திகதி(22,29 ஆம்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்