பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் டிசம்பர்-05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் இன்று(28-11-2018) உத்தரவிட்டுள்ளார். கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவினாரென அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது...
கொரோனா ஊரடங்கால் நாடெங்கும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கவலை தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், குடும்ப வன்முறைக்கான தீர்வென்ன என்பதை குறித்த ஆலோசனைகளை உளவியலாளர்கள் வழங்கியுள்ளார்கள். சர்வதேச வணிக நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ், கடந்த வாரம் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலந்தொட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை...
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபையில் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொத்துவில் பிரதேசசபையில் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.பிரதேச சபையின் தவிசாளர் பதவியை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தாம் இன்னமும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று செவ்வாய்க்கிழமை(03) பிற்பகல் நடாத்திய சந்திப்பின் பின்னர் கருத்துத்...
ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதியிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் யாதுரிமைப் பேரணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 91(1)(ஈ)பிரிவை மீறியதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்மிளா ரொவீனா ஜயவர்த்தன கோணவல என்ற கொழும்பு மாநகர சபையின் சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரே குறித்த மனுவைத்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையிலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இன்று (23) காலையுடன் 86 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(இரண்டாம் இணைப்பு) நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடலின் பின்னர் மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (முதலாம் இணைப்பு) இலங்கை முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) பிற்பகல்-06 மணி முதல் நாளை காலை-06 மணி வரை...
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(15) ஏற்பட்ட குழப்பநிலை முற்றிய நிலையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். மகிந்த ராஜபக்சவின் உரை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது உரையை வாக்கெடுப்புக்கு விடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம்...
வெளிநாட்டுக்குச் சென்ற தமது சகோதரர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டு தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் சிலரே வடக்கில் வாள்வெட்டுச் செயல்களில் ஈடுபடுவதாக வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சில் நேற்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில்...
ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒன்பது பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையக விசேட விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்குப் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்பிரகாரம் குறித்த அதிகாரிகள் தொடர்பில் குற்ற விசாரணை மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்