அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில் இலங்கை வெற்றி கண்டுள்ளது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து இடங்களிலுமுள்ள சகலருக்கும் தடுப்பூசி...
கனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் அவரது லிபரல் கட்சிக்கு எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கனடாவில் வழக்கமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடாத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 இடம்பெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்...
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் அனைத்து நாடுகளிலும் உள்ள பயணிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியும். இதேவேளை,நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் இரு கொரோனாத் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை (21.09.2021) அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் குறித்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. கொரோனாத் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத் தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை மையமாக கொண்டு மேற்படி கூட்டத்...
காபூல் விமான நிலையத்தை நோக்கி வெடிகுண்டுகளுடன் புறப்படவிருந்த ஐ.எஸ்.கே தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் கார் மீது ட்ரோன் மூலம் அமெரிக்கா மற்றொரு அதிரடித் தாக்குதலை நடாத்தியுள்ளது. சம்பவத்தில் குறித்த கார் வெடித்துச் சிதறியதுடன் அதிலிருந்த வெடிகுண்டுகளும். பயங்கரச் சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப் பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. இந்தச் சம்பவத்தில் கார் வெடித்துச்...
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் கிளையான கோரேசன் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா ஆளில்லா டிரோன்கள் மூலம் நேற்று நள்ளிரவு வேளையில் ஆப்கானிஸ்தானில் குண்டுவீசித் தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்புக்களுக்குச் சதித் திட்டம் தீட்டிய முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. காபூலில் மேலும் குண்டுவெடிப்பு...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்துக்கு அருகில் நேற்று(26) இரவு பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியது. முதல் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்து சில மணி நேரத்திற்குள் இரண்டாவது வெடிகுண்டுத் தாக்குதலும் நடாத்தப்பட்டது. இந்நிலையில் மேற்படி இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது....
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்துக்கு அருகில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இன்று(26) பதிவாகியுள்ளது. மேற்படி சம்பவத்தில் சிறுவர்கள் உட்படக் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாகவும், அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்புத் தளம்...
இளைஞர் ஒருவர் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் நடந்த இத் தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தாக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதிபரைத் தாக்கியவரும் கூட்டத்தில் காணப்பட்ட மற்றொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்கள்...
மீண்டும் வேகமாக பரவ தொடங்கியிருக்கும் புதிய கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரித்தானியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 56 மில்லியன் மக்கள் மீண்டும் பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். 2019 இல் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் பெற்று பிரித்தானியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்