இந்தியாவின் குஜராத்திலுள்ள கோயிலில் முதலையொன்று கோயில் கருவறை வரை சென்று சுவாமி கும்பிட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பால்லா கிராமத்திலுள்ளது கோடியர் கோயில். ”கோடியர் தேவி” எனப்படும் இந்து மதப் பெண் கடவுளின் கோயில் அது. முதலையை வாகனமாகக் கொண்ட கோடியர் தேவிக்கு வட இந்தியாவில் பல்வேறிடங்களிலும் கோயில்களுள்ளன. இந்நிலையில்...
முன்னெப்போதுமிலலாத வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில் பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. துரியன் பழங்கள் பிறருக்கு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக காணப்படுகிறது. உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை...
தன்னை வேலையை விட்டுத் தூக்கியமையால் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை கதறவிட்டுள்ளார் ஹரியானாவை சேர்ந்த பெண்ணொருவர். இந்தியாவின் ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம் பெண்ணொருவர் பணியாற்றி வந்துள்ளார். திடீரென அந்நிறுவனத்தின் நிர்வாகம் குறித்த பெண்ணை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது. இதனால்,குறித்த பெண் திடீரென நிறுவனத்தின் மொட்டை மாடிக்குச் சென்று...
கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண்ணொருவர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நூதன வழியைக் கையாண்டுள்ளார். அவர் தனது கார் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார். இப்படங்கள் உடனடியாகவே சமூக...
மகாராணி இரண்டாம் எலிசபெத் சோசியல் மீடியாவை கவனித்துக்கொள்ள சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் மகாராணி இரண்டாம் எலிசபெத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கினார்.ராணி எலிசபெத்திற்கு தற்போதைய சமூக வலைத்தளப் பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சயம் இல்லாத காரணத்தால் அவருக்கு உதவ சோஷியல் மீடியா மேனேஜர்...
தாய்லாந்தில் தனது தாயால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பச்சிளம் குழந்தையை நாயொன்று காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கர்ப்பத்தை பெற்றோர்களிடமிருந்து மறைப்பதற்காக மகளான 15 வயது இளம்பெண் இவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பேன் நாங் காம் எனும் கிராமத்தில் பிங்பாங் எனும் அந்த...
வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். நாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை. இதுதொடர்பாக வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து அதனை...
இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் எனும் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த-2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் குறித்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்படி விமானத்தை சுமார்-10...
கைவிடப்பட்டுள்ள நாய்களுக்காக சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் நாய்கள் சரணாலயத்தை பளை, இயக்கச்சியில் நிறுவியுள்ளது.நாய்கள் சரணாலயத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(12) பிற்பகல்-04 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன்,வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளார்கள். மேற்படி நாய்கள் சரணாலயம் 20 ஏக்கர் நிலத்தில்...
பூமியின் ஓர் அங்கமாகக் காணப்படும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை நான்காயிரம் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாமல் விண்ணிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் குறித்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த-1992 ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் வசிக்கும் சூரிய மண்டலத்துக்கு...
2,395FansLike
40FollowersFollow
535SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்