Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

தென்னிலங்கையில் நடந்த அரசியல் குழப்பத்தை சாட்டாக வைத்துக் கொண்டு எங்களுக்கு அடிப்பார்கள் என்ற அச்சமுமிருந்தது. தமிழ்மக்களின் கடைகளை கொளுத்தி அடித்தார்களாயின் என்ன செய்வது? இதனால் தான் நான் அமெரிக்காவிடம் உடனடியாக சமாதானப் படையை இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற...
குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்குப் பலாலி விமானப்படையினர் 64 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் புதிய மாடிக் கட்டடத்தை உருவாக்கித் தந்துள்ளதாக மேற்படி வித்தியாலய அதிபர் க.காராளசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்தக் கால்கோல் விழா கடந்த வியாழக்கிழமை(17-01-2019) முற்பகல் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
புதிய அரசியலமைப்புத் தமிழ்மக்களுக்கு சாதகமாக வந்தாலென்ன....பாதகமாக வந்தாலென்ன...தமிழ்மக்களுக்கு நிச்சயமொரு விடிவு காலம் அமையுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். "ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்" எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கு நிகழ்வு நேற்று(21)யாழ்.நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ்....
பிரசித்தி பெற்ற யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தைப்பூச மஞ்சத் திருவிழா சிறப்புப் பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை(21)சிறப்பாக இடம்பெறுகிறது. மேற்படி விழாவையொட்டி இணுவில் கந்தசுவாமி ஆலய சூழல் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளது. மேற்படி விழாவையொட்டி இன்று காலை-06 மணியளவில் இணுவில் மருதனார்மடம் பல்லப்பர் வைரவர் ஆலய...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தைப்பூச உற்சவமானது இன்று திங்கட்கிழமை(21)பிற்பகல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல்-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக திருமஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். இதேவேளை,தைப்பூச தினத்திற்கு முதல்நாளான புதிர் பூஜை (புதிர்தினம்) நேற்றைய தினம்(20)285 ஆவது...
யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை(19) சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாலயத் தேர்த் திருவிழா மற்றும் இன்றைய தினம் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள...
யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை(19) மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. காலை-09 மணிக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் தேர்த் திருவிழா உற்சவக் கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத்...
பெண்கள் கிரியைகள் எதுவும் நிகழ்த்தக் கூடாதென ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறான பெண்ணே பூசை செய்து, பெண்ணே தீபாராதனை வழிபாடுகளாற்றும் சிறப்பை ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் காணலாம். அம்பிகையுடன் தானும் ஒரு அம்பிகையாகத் தேரிலேறி வலம் வருகின்ற திருக் காட்சியை நீங்கள் இவ்வாலயத்தில் காணலாம் என...
யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(15)தைப்பொங்கல் விசேட வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது. முற்பகல்-10 மணியளவில் ஆச்சிரம முன்றலில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றது. பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஆச்சிரம மண்டபத்தில் திருமுறைப் பாராயண நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆச்சிரம முன்றலில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கும்,ஆச்சிரமத்தில் அமைந்துள்ள சிவலிங்கப் பெருமானுக்கும்,ஈழத்து இந்தியச் சித்தர்கள், நாயன்மார்களின்...
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும்,தமிழ்நாடு திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகமும், யாழ்ப்பாணத் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து முன்னெடுக்கவுள்ள சிலப்பதிகார முத்தமிழ் விழா நாளை வெள்ளிக்கிழமை(18-01-2019) காலை-09 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது நாளை ஆரம்பமாகும் மேற்படி விழா நாளை மறுதினம் சனிக்கிழமையும்(19)இடம்பெறும். இருதினங்களிலும் குறித்த விழா காலை, மாலை அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த...
2,395FansLike
40FollowersFollow
439SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்