Home பன்னாட்டுச் செய்திகள்

பன்னாட்டுச் செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் பண பற்றாக்குறை காரணமாக வார இறுதிகளில் மூடப்பட உள்ளதாக அதன் தலைமை அறிவித்துள்ளது. ஐ.நா பட்ஜெட்டுக்காக பணம் வழங்கிய நாடுகளின் விவரம் பற்றிய ஆவணத்தை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, வெளியிட்ட ஆவணத்தில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் 30...
விண்வெளியில் முதன்முதலில் நடந்து சாதனை படைத்த முன்னாள் சோவியத் யூனியன் விண்வெளி வீரர் அலெக்ஸி லியோநோவ் (Alexei Leonov) காலமானார். அவருக்கு வயது 85. முன்னாள் சோவியத் யூனியன் சார்பாக 1965ம் ஆண்டு மார்ச் மாதம் விண்வெளி சென்ற லியோநோவ், விண்வெளியில் 12 நிமிடம் நடந்தார். இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் எனும் பெருமை...
உலகின் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான கோனா வெடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரேலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை விசாரிக்க ஹூண்டாய் நிறுவனம் துவங்கியுள்ளது. பியாரோ கோசெண்டினோ என்பவர் இந்த மார்ச் மாதம் ஹூண்டாய் கோனா காரை வாங்கியுள்ளார். அவர் தனது கரேஜில் ஹூண்டாய்...
இங்கிலாந்து அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணான டிலானி செல்வநாதன் தெரிவாகியுள்ளார். "Miss England- 2019" அழகிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அவர் தேர்வாகியுள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, "Miss England" போட்டியின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருப்பது...
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்மா, அப்பா, சகோதரி, பாட்டி என நான்கு பேரையும் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞன் கொடூரமாக கொலை செய்துள்ளான். இணைய விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட மென்ஹாஸ் ஜமான், அதனூடாக ஏற்பட்ட மன அழுத்தம்...
உலகளவில் நடக்கும் போர்களில் சிக்கி அதிகளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும்...
சவூதி அரேபியாவில் வெளிநாடுகளில் இருந்து அதிகளவான மக்கள் பணியாற்றி வருகின்றார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் அதிகம். நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.மேலும் முகாமையாளர்கள் தரங்களிலும் பணியாற்றி வருகின்றார்கள். இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க...
முதன்முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக தமது ஜெட் விமானத்தை தென்கொரியா அனுப்பியுள்ளது. ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு நான்கு குண்டு வீசும் விமானங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் இன்று 6.4 ரிக்டர் அளவு கோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் இன்று(24) காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டமையால் பல கட்டடங்கள் ஆட்டம் கண்டன. இந்தோனேசியா தீவுப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். மேலும் அது பசுபிக் கடற்பகுதியில் அமைந்திருக்கின்றமையால் அப்பகுதியிலுள்ள நிலத்தட்டுகள் இயற்கையாகவே மிகவும் பலவீனமானதொன்றாகும். இந்நிலையில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 11.53 மணியளவில் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அம்போன் தீவுக்கு...
2,395FansLike
117FollowersFollow
562SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்