Home பொருண்மியம்

பொருண்மியம்

இயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த அங்காடியை கல்வியியலாளரும், சமூக சேவையாளருமான நடராஜா அனந்தராஜ் அவர்கள் திறந்து வைத்தார். இன்று...
உங்களின் ஆரோக்கியம் இன்றைய அளவில் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டு விட்டது. உங்களை வந்து ஒரு நோயாளியாக ஆக்க வேண்டும். அந்த நோயாளி சாகக் கூடாது. இந்த இரண்டிலும் கவனமாக இருப்பார்கள். நீங்கள் நிறைய வேலை செய்ய வேண்டும். உழைக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும். அதில் பெரும் தொகையை உங்களின் ஆரோக்கியத்துக்காக செலவழிக்க வேண்டும். எஙகளின் தாத்தா...
கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தின் புதிய உற்பத்தி பொருளான "திரவ கைகழுவி" (Karuvi Liquid Handwash) அறிமுகமும் பொங்கல் விழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள கருவி உற்பத்தி நிலையத்தில் 16.01.2020 வியாழக்கிழமை மதியம் திரவ கைகழுவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த திரவ கைகழுவியானது அப்பிள், எலுமிச்சை நறுமணங்களுடன் கிடைக்கிறது. எங்களது உற்பத்திகளுக்கு...
இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இயற்கை வழி இயக்கத்தினரின் ஆதரவுடன் இன்று மாலை ஊரெழு மார்கோசா விடுதியின் வாயிலில் இயற்கை வழி அங்காடி திறந்து வைக்கப்பட்டது. அங்காடியை கல்வியியலாளரும், சமூக சேவையாளருமான வல்வை அனந்தராஜ் திறந்து வைத்தார். இயற்கை முறையில் விளைந்த மரக்கறிகள் மற்றும் விளைபொருட்களை இனிவரும் காலங்களில் இந்த அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்வில் இயற்கை...
இயற்கைவழி இயக்க செயற்பாட்டாளர்களிற்கான வருட இறுதிச் சந்திப்பு கடந்த 21/12/2019 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா கிறீன் (Margosa Green) விடுதியில் இடம்பெற்றது. தை மாதம் 8 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி இயற்கை விவசாய வாரத்திற்குரிய காலமாகும். இம்முறையும் அந்தக்...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் கிரிசன்.  70 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்று  இயற்கை விவசாயம், வாழ்வியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தியும் வருகிறார்.   இளம் விவசாயியான இவர் தான் சார்ந்த சூழல் குறித்து மிகவும் கரிசனை நிரம்பியவராக இங்குள்ள ஏனைய இளைஞர்களுக்கும்...
யாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய்...
Climathon Jaffna - காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளல் தொடர்பான சர்வதேச நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 25.10.2019 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது. நேற்று காலையில் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் 24 தனிப்பட்ட மற்றும் குழுக்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்கள்,  அமைப்புக்கள் தொடர்பிலான விளக்கக்காட்சிகளை (presentations)...
யாழ்ப்பாணத்தின் இயற்கை விவசாய முயற்சி முன்னோடி இளைஞன் அல்லை விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசனின் தனி உழைப்பால் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை(12)பிற்பகல் இலக்கம் - 384 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி மேற்படி...
உலக சந்தையில் இலங்கை கறுவாவுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இலங்கை கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கும், மடகஸ்கார்...
2,395FansLike
117FollowersFollow
584SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்