போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் இயற்கை விவசாய செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அப்பிரதேசத்துக்கு பொறுப்பான இளம் விவசாய போதனாசிரியர் மகிலன் அவர்கள் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். அவரது முயற்சியில் சிவனொளி பண்ணைப் பெண்கள் அமைப்பு, உருத்திரபுரம் இளம் விவசாயிகள் கழகம் என்பன உருவாகி திறம்பட...
வெள்ளரிக்காய் பல்வேறு சத்துக்கள் மிகுந்த காயாகும். பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். நச்சுக்களை வெளியேற்றிப் போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமானதொரு வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. சரி, வாருங்கள்... தினமும் ஒரு வெள்ளரிக்காயை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் ஆராய்வோம். உங்கள் சருமத்திற்கு...
யாழ்.ஏழாலை கிழக்கில் அண்மைக் காலமாக அடுத்தடுத்து வாழைக்குலைத் திருட்டுக்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏழாலை கிழக்கில் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வரும் இளம் விவசாயியான மகாதேவன் சுரேஷ்குமாரின் வாழைத் தோட்டத்தில் ஆறு கப்பல் வாழைக் குலைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொள்ளையிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ளன. அதே தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி உடுவில் உருளைக் கிழங்கு சங்கத்திற்குட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் குப்பிழான்,ஏழாலை, ஈவினை, புன்னாலைக்கட்டுவன்,...
பரம்பரை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறான படிப்புக்களை பலரும் கீழ்நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தத் துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விவசாயத்துறையில் முதுநிலை படிப்பு படித்தார் பஞ்சாப்பைச் சேர்ந்த கவிதா என்ற மாணவி. அவரது...
விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கு,வடமத்திய,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணப் பயிர் என அழைக்கப்படும் பெரும்போக புகையிலைச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வலிகாமத்தில் ஏழாலை,குப்பிழான்,புன்னாலைக்கட்டுவன்,மயிலங்காடு, ஈவினை,வயாவிளான்,குரும்பசிட்டி,அச்செழு,புத்தூர்,நவக்கிரி,ஊரெழு,உரும்பிராய்,கோப்பாய், சுன்னாகம்,கந்தரோடை,மருதனார்மடம்,இணுவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும் பல ஏக்கர் நிலப்பரப்பில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் புகையிலை நாற்றுக்களின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் இந்த வருடம்...
கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சோள அறுவடை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 61 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த-2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவிய...
யாழ்.வலி-தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச் சந்தையில் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் வெளி வியாபாரிகள் சிலரால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சந்தையில் நிரந்தரமாகத் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக நிரந்தரத் தேங்காய் வியாபாரிகளுக்கும்,வெளி வியாபாரிகளுக்குமிடையில் அடிக்கடி கடும் வாக்குவாதங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சந்தையில்...
சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தினரின் ஏற்பாட்டில் "சமூக பொருளாதார அரசியல் பின்னணியில் இயற்கை விவசாயம்" எனும் தொனிப் பொருளிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை(22-11-2018) பிற்பகல்-04 மணி முதல் யாழ்.கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இடம்பெறவுள்ள குறித்த...
2,395FansLike
40FollowersFollow
516SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்