இயற்கை வழி இயக்கத்தின் முதல் களச் செயற்பாடாக யாழ்ப்பாணத்தில் அங்காடிக் குடிலில் வாராந்த சந்தை 06.04.2018 வெள்ளிக்கிழமை 3 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலை எதிரில் சிங்கர் காட்சியறைக்கு அருகாமையில் உள்ள Juicy touch நிறுவன முன்றலில் ஆரம்பமானது.   வைத்திய கலாநிதி சிவன்சுதன் அவர்கள் குறித்த அங்காடிக் குடில் இயற்கை சந்தையை ஆரம்பித்து வைத்தார். ஆரம்பித்து வைத்தது...
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பச்சை மிளகாய் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் யாழ். விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டின் வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வருடம் வழமையை விட அதிகமான விவசாயிகள் பெரும்போக மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு...
யாழ்.குடாநாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. குடாநாட்டில் விவசாயத்திற்கு ஏதுவான புவியியல் சூழல் காணப்படுகின்றமை விவசாயத்தின் தொடர் இருப்பிற்குச் சாதகமான விடயம். அதேவேளை, எமது மூதாதையர்கள் விவசாயத்தையே தமது முக்கிய பொருளாதாரமாகக் கொண்டிருந்தமையும் பலரும் அறிந்த விடயம். யாழ்ப்பாணத்தில் விவசாயிகள் பல மரக்கறிப் பயிர்களைப் பயிரிட்டு வந்தாலும் ஒரு சில மரக்கறிச்...
யாழ். மண்ணிலிருந்து 'விவசாயி' எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆரம்ப இதழ் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. விவசாயி மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும்,'கற்பகவனம்' வேளாண்மை நிறுவன நிர்வாக இயக்குநருமான சிவராஜா அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். விவசாயம்...
மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார். வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். கடந்த 16.08.2018 அன்று யாழ்ப்பாணத்தில்...
இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் 2.30 மணியளவில் குப்பிழானில் அமைந்துள்ள செம்புலம் இயற்கைவழி உலருணவு உற்பத்தி நிலையத்துக்கும் பண்ணைக்கும் விஜயம் செய்திருந்தனர். மாலை 5.30 மணிவரை தொடர்ந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. எமது பிரதேசத்தில் இயற்கையாகவே வளரும் தன்மையுடையதும் அதிக போசனைப் பெறுமானம் உடையதுமான சுண்டங் கத்தரி பயிர்ச்செய்கை முறையையும்...
சமீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பு சாத்தியமா என்பது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களின் கருத்துகள் இங்கே... விதைப்பந்துகள்...
யாழ். வலிகாமம் பிரதேசத்தில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் பிரதேசத்தில் குப்பிளான்,ஏழாலை,புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, ஈவினை, வசாவிளான், குரும்பசிட்டி,சுன்னாகம், மல்லாகம் மருதனார்மடம், ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கோப்பாய், இருபாலை, நீர்வேலி, சிறுப்பிட்டி, அச்செழு, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பமாகி நடைபெற்று...
யாழில் புகையிலைச் செய்கையின் அறுவடை நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் பெரும்போகத்தையொட்டி விவசாயிகள் புகையிலைச் செய்கையில் ஆர்வம் செலுத்தியிருந்தார்கள். யாழில் வலிகாமம் பகுதியில் குப்பிளான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன்,ஈவினை, வயாவிளான், குரும்பசிட்டி, அச்செழு, புத்தூர், நவக்கிரி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய், சுன்னாகம், கந்தரோடை, மயிலங்காடு, மருதனார்மடம், இணுவில் உள்ளிட்ட பல்வேறு...
யாழில் பூசணிக்காயின் விலையில் கடும் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் தற்போது ஒரு கிலோ பூசணிக்காய் 20 ரூபாவாகத் தம்மிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் பெரும்போக மரக்கறிச் செய்கையுடன் இணைந்த வகையில் அதிகளவு பூசணிச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காரணத்தால் அண்மைக்காலமாக குடாநாட்டுச் சந்தைகளில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றன....
2,395FansLike
40FollowersFollow
516SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்