Home முகப்பு

முகப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார். கடந்த மாதம்-26 ஆம் திகதி ஜனாதிபதியால் பதவி கவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை. இந்நிலையில் இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை...
என்னைச் சிறைக்கு அனுப்பப் போவதாக பலரும் அச்சுறுத்தியுள்ளனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு விளைவுகளையும் சந்திக்க தயாராகவிருக்கின்றேன் என சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி உரையாற்றுவதைத் தடுக்க சபாநாயகர் திட்டமிட்டிருந்ததால் தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக போலி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் எனவும், கொடுங்கோலன் எனவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்பில் நேற்று(10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மண்டேலாவாக இருப்பேனென வாக்குறுதியளித்து அவர் பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத் தான்...
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையிலுள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி நாட்டின் பிரதமரைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பிரதமரின் வதிவிடமான...
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வசந்த சேனநாயக்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது குறித்து அந்தக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். இது குறித்துத் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம்(28) அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த வசந்த சேனநாயக்க தாம்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் நிலமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று திங்கட்கிழமையுடன்(29) 610 ஆவது நாளாகும். இதனை முன்னிட்டு தமக்கான தீர்வைத் தாமதமின்றி பெற்றுத் தருமாறும், தமது மீதி நிலங்களை விடுவிக்குமாறு கோரியும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கி கவனயீர்ப்பு நடைபயணமொன்றை முன்னெடுத்தனர். இந்த நடைபயணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும்...
புதுக்கோட்டையில் மாப்பிள்ளைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட காரணத்தால் அவரது திருமணம் நின்று போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் பல்லவராயன்பத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கும் கரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெரியநாயகிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்றைய தினம்(28) திருமணம் நடைபெறுவதாகவிருந்தது. கடந்த பத்துத் தினங்களுக்கு முன் இளங்கோவனுக்கு கடுமையான காய்ச்சல்...
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை(29) அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில் 66 வயதான முதியவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குடும்பப் பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை...
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சிக்கான அறிவிப்பு ஒன்றுகூடல் நேற்றைய தினம்(24) யாழ்ப்பாணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் பிரதேச சபை உறுப்பினரொருவர் பரப்பிய கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்மக்கள் பேரவையின்...
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்றுப் புதன்கிழமை(24) முற்பகல் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் மாபெரும்...
2,395FansLike
40FollowersFollow
262SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்