Home யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழில் வீதியில் அநாதரவாக வயோதிபத் தாய் ஒருவர் கைவிடப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வயோதிபத் தாய் தள்ளாத வயதிலும் தன்னந்தனியாகத் தற்போது யாழின் பல பகுதிகளிலும் வீதிகளில் அலைந்து திரிந்து...
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்.மருதனார்மடம் சந்தியில் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக கடந்த-01 ஆம் திகதி பழக்கடை வியாபாரி மீது நடாத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(26.09.2021) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும்-06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
கல்விப் பொதுச் சாதாரணதரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்திகள் பெற்ற யாழ்.சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளிற்கு டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் திருமதி- சிவனேஸ்வரி மகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலிகாமம் தெற்குப் பிரதேசசபை உறுப்பினர் சமூகதிலகம் லயன் பாலசிங்கம்...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை(27.09.2021) காலை-07 மணி முதல் நண்பகல்-12 மணி வரை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பணிப் புறக்கணிப்புப் போராட்டடம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு இடையூறு எதுவும் இன்றிக் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை,நாடளாவிய ரீதியில் தாதியர்...
அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (26.09.2021)யாழ்.மண்ணைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவுக்கு நேரடியாகச் சென்று இரத்தம் வழங்கியுள்ளமை பலரதும் பாராட்டையும் பெற்றுள்ளது. தமிழ்த்தேசியத்தை ஆழமாக நேசிக்கும் குறித்த இரு இளைஞர்களிலும் ஒரு இளைஞன்...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில் 12 தினங்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(26.09.2021) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரத்தியேகமான இடமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தியாகதீபம் திலீபனின் உருவப் படத்திற்கு மலர்தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறையும், நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலான உரையரங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை(26.09.2021) இரவு-07 மணியளவில் இணைய வழியூடாகச் சர்வதேச ரீதியில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ந.சிவகரன் ஒருங்கிணைப்பிலும், தலைமையிலும் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வானது மெய்யியல் துறை மாணவர்களினாலும்,...
தியாகதீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(26.09.2021) வடக்கு,கிழக்குத் தமிழர் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 'மீளக்குடியமர்தல்'எனும் பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை...
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட இணுவில் காரைக்கால் சிவன் கோவில் சூழலில் சமூகப் பொறுப்பற்ற இருவரால் இன்று சனிக்கிழமை(25.09.2021)கொண்டு வந்து விடப்பட்ட ஆறு அடி நீளமான நாக பாம்பு மீளவும் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் ஆறு அடி நீளமான நாகபாம்பை இருவர் கொண்டு வந்து விட்டுச் சென்ற...
மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாகப் பழக்கடை நடாத்தி வந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட வன்முறைக் குழுவைச் சேர்ந்த நால்வர் இன்று சனிக்கிழமை(25.09.2021)யாழ்.மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற தேவா மற்றும்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்