ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்: அறிவிப்பு வெளியானது!

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க இன்று(18) அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலி முகத்திடத்தில் இடம்பெற்ற ‘தேசிய மக்கள் சக்தி’ மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த- 1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக்க கட்சியின் ஜனாதிபதி...

மூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கம் நடாத்தும் மூத்த கூட்டுறவாளரும், பணியாளர் நலன்புரிச் சங்க ஸ்தாபகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர்- சி. சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமும், பணியாளர் ஒன்றுகூடலும்,...

யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு!

வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று (18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகத்தின் பல கட்டடங்களின்...

சுயமாகச் சிந்திக்கும் தமிழன் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க மாட்டான்: முன்னாள் முதலமைச்சர்

சுயமாகச் சிந்திக்கும் எந்தவொரு தமிழனும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க மாட்டான். வாக்களிக்கக்கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...

காணாமல் போனோருக்கான பிராந்திய அலுவலகம் யாழில் திறப்பு

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் எதிர்வரும்-24 ஆம் திகதி யாழில் திறந்து வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டு மேற்படி அலுவலகத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார். இலக்கம் 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மேற்படி...

ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அனுரகுமார திசநாயக்கவே என்று, அதிகளவான ஜேவிபி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள்...