யாழில் புகையிரதம் மோதிய 73 வயது முதியவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இன்று திங்கட்கிழமை(19) முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை-05.30 மணியளவில் யாழ். அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி(வயது- 73) எனும் வயோதிபரே உயிரிழந்தவராவார்.குறித்த விபத்துச்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை (21) பிற்பகல்-04 மணி முதல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த...

யாழில் தமிழரசுக் கட்சி அலுவலகம் முற்றுகை!

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று திங்கட்கிழமை(19) பிற்பகல் எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முகமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...

யாழில் தொழில்நுட்பகூடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பகூடக் கட்டடம் இன்று திங்கட்கிழமை(19) சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையும் திரைநீக்கம்...

எமது மக்களை சர்வதேச சமூகம் கைவிட முடியாது!

எமது மக்களை சர்வதேச சமூகம் கைவிட முடியாது என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அமரர்- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலை திறப்பு விழா...

சீனாவின் தலையீடுகள்: ஆதங்கம் வெளியிட்ட ராகுல்காந்தி

இலங்கை உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆதங்கம் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நேற்றைய தினம்(18) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...