மருதங்கேணியில் திரண்ட மக்கள்(Photo)

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழ். வடமராட்சி மருதங்கேணியில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம்(15) ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒருவருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் மாபெரும் போராட்டம்...

விஜயகாந்தின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி

யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும், முற்போக்குத் தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் நேற்றைய தினம்(14) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைத்திருக்க...

யாழில் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள்(Photos)

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளில் "சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே இனவாத விஷத்தில் அழிவோமா? ஒன்றிணைந்து உண்மையான எதிரியைத் தோற்கடிப்போமா?" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 'சம உரிமை இயக்கம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகள்...

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி:கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பேச்சு

வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவட்ட மட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தி வருகிறது. நாளை வெள்ளிக்கிழமை(16) யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றுகூடி முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் பின்னர்...

அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும், மூத்த சைவத்தமிழறிஞருமான அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13) காலை கொழும்பில் காலமானார். தமிழ்நாடு மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலியைச் சேர்ந்த வடமாகாண...

பௌத்த விஹாரைக்கு காணி வழங்கிய தமிழர்: சிங்கள ஊடகங்கள் புகழாரம்

புபுரஸ்ஸ பகுதியில் பௌத்த விஹாரை ஒன்றுக்கு தனது காணியை அன்பளிப்பாக வழங்கிய, சிங்கள மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுப்ரமணியம் என்ற தமிழ் வர்த்தகர் சிங்கள மொழி ஊடகங்களால் போற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கெலி ஓய தெலம்புகல நீக்ரோதசைத்திய பிரிவெனவின் பீடாதிபதி கொடமுன்னே...