யாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி! (Photo)

யாழ்.லீக்கின் அனுமதியுடன் ‘BEES SPORTS’ அனுசரணையில் நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் தொடரில் நேற்று(11) நடைபெற்ற ஆட்டமொன்றில் ஆனைக்கோட்டை யூனியன் அணியை எதிர்த்து சென்.அன்ரனீஸ் அணி மோதியது.

குறித்த போட்டியில் 07:01 என்ற கோல் கணக்கில் ஆனைக்கோட்டை யூனியன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.