பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தி வரும் அழைக்கபட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மனோகரா அணியும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. குறித்த ஆட்டம் நேற்றைய தினம்(16) யாழ்.வல்வை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக ஆடிய இரு அணிகளும் மிகச் சிறப்பாக ஆடியமையால் ஆட்ட நிறைவில் தலா ஒரு கோல்களை இரண்டு அணியும் பெற்றுக் கொண்டன.

இந்நிலையில் சமநிலை தவிர்ப்பு உதைக்காக ஆட்டம் ஆரம்பிக்க மிகவும் சுவாரஷ்யமான சமநிலை தவிர்ப்பு இடம்பெற்றது .முதலில் ஆட்டத்தில் பங்கெடுத்த இரண்டு அணிகளின் அனைவரும் கோல்களை பெற்றுக்கொள்ள மீள ஆட்டம் சமநிலையானது .

மீள ஒவ்வொருவர்களாக ஆரம்பமாகி பயணிக்க இறுதியில் 14:13 எனும் கணக்கில் அல்வாய் மனோகரா அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

அண்மைய ஆண்டுகளில் பல்வேறு சுற்றுப் போட்டிகளில் இளம் அணியாக சாதித்து கிண்ணங்களை சுவீகரித்துவரும் அணியின் ஆக்கிரோஷமான ஆட்டத்தின் பால் அனைவரையும் கவர்ந்து வரும் அல்வாய் மனோகரா அணியின் வெற்றி பிரதேச மக்களிடையேயும், வீரர்களிடையேயும் மிகுந்த மகிழ்வையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திருக்கின்றது.

{‘Jaffna Vision’ செய்திகளுக்காக வடமராட்சியிலிருந்து தாயகன்-}