யாழ். வயாவிளானில் நாளை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி

யாழ்.ஒட்டகப் புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை(21) பிற்பகல்-01.30 மணி முதல் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலை அதிபர் து.இந்திரஜித் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.ஆனந்தகுமார் பிரதம விருந்தினராகவும், வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை,மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகம் கேட்டுள்ளது.

(எஸ்.ரவி-)