பாடும் மீன்கள் அணியை பந்தாடியது வதிரி டயமண்ட்ஸ் அணி!! (Photos)

டான் தொலைகாட்சி அழைக்கப்பட்ட கழகங்களிடையே நடாத்தி வரும் பிரமாண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வதிரி டயமண்ட்ஸ் அணியை எதிர்த்துக் குருநகர் பாடும்மீன்கள் அணி மோதிய ஆட்டமானது நேற்று முன்தினம்(25) பிற்பகல் பல்லாயிரம் இரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற்றது .

போட்டியின் ஆரம்பத்திலேயே டயமண்ட்ஸ் அணியினர் இரண்டு கோல்களை அடித்து எதிரணிக்கு அதிர்ச்சியளிக்க போட்டி மேலும் தீவிரமடைந்து கோல்களால் மாறி மாறி அரங்கமே அதிர்ந்தது.

டயமண்ட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பீமாவின் ஹாட்ரிக் கோல் உதவியுடன் 7:5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது டயமண்ட்ஸ் அணி.

{கானகன்-}