தரையில் படுத்துறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!! (Video)

தானும் தனது மனைவி உள்ளிட்டோரும் தரையில் படுத்துறங்கிய புகைப்படத்தை இந்திய அணியின் கேப்டன் தோனி வெளியிட்டுள்ளாா்.

சென்னை,கொல்கத்தா அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம்(09) நடைபெற்றது. சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடா்ந்து சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி உட்பட சென்னை அணி வீரா்கள் அடுத்த போட்டிக்காக ராஜஸ்தான் செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தனர்.

போட்டி முடித்து சென்னை விமான நிலையம் வந்த வீரா்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனா்.அப்போது அலுப்பின் காரணமாக தோனி, சாக்ஷி ஆகியோா் விமான நிலையத்தில் தரையில் படுத்துறங்கியுள்ளனா்.

குறித்த புகைப்படத்தை தோனி தனது ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஐபிஎல் டைமிங்குக்கு பழகப்பட்ட பின்னர் காலை நேர விமானமென்றால இதுதான் நடக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.