பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியா விபத்தில் மரணமா??

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியா.இவருக்கென ஒரு பெரிய இரசிகர் பட்டாளமே உண்டு. இவர் இலண்டனில் விபத்தொன்றில் இறந்து விட்டதாகப் பொய் செய்தி ஒரு செய்தி வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது. உடனே இச்செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது. இதனைக் கண்ட அவரது இரசிகர்கள் அதிர்ந்தனர்.

நடிகர் அர்ஷ்த் வர்சி இதனை உண்மை என நம்பி இரங்கல் பதிவு செய்தார்.இதனைத் தொடர்ந்து பலர் ரிப் மெசேஜ் பதிவிட்டனர்.

இந்த விஷயம் தெரிந்து அதிர்ந்த சனத் ஜயசூரியா தன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தான் நலமாகவிருப்பது தொடர்பில் பதிவிட்டார்.

பின்னர் “தன்னைப் பற்றிய போலி செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது எனவும், இதனை யாரும் நம்பவேண்டாமெனவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.