இதை செய்யுங்க…!: மரத்தில் ஏறி பயமுறுத்திய இலங்கை கிரிக்கெட் இரசிகர்…? (Photo)

இலங்கை கிரிக்கெட் அணி இரசிகரொருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரிப் புதுவிதமாகப் போராட்டம் நடாத்தி வருகிறார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் யூலை -14 2019 வரை இத் தொடர் நடைபெறுகிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது.

மோசமான தோல்வி

இதில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் இரசிகரொருவர் மரத்தின் மீதேறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் அணியின் படுமோசமான தோல்விக்கு பின் அந்த ஆல் ரவுண்டர் திசாரா பெரேராவை ‘பேட்டிங்’ வரிசையில் முன்னதாக களமிறக்கும் வரை போராட்டம் நடாத்துவேன் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரசிகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்டு ‘பிரமாதம்…. அவனை அப்பிடியே மரத்து மேலேயே உட்கார வைங்க…’ எனக் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.