மகாஜனக் கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி தேசிய சம்பியனானது

தேசிய மட்டத்திலான இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வென்று மகுடம் சூடியது தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி.

இதன் இறுதிப் போட்டி நேற்று வியாழக்கிழமை 11 மணிக்கு கொழும்பு சிற்றிலீக் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

பொல்காவலை பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து விளையாடிய யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 1 – 0 என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

இலங்கை பாடசாலைகள் அணியில் விளையாடிய மகாஜன வீராங்கனை சானு பாஸ்கரன் அடித்த கோல் இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

வெற்றியை அடுத்து பல்வேறு இடங்களில் இருந்தும் மகாஜனாக் கல்லூரி வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.