வடமாகாணத்தில் பயணத்தடை அமுலானது

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தாம் வாழும் மாவட்டத்திற்கு வெளியே வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கண்டி வீதி அரியாலைப்பகுதியில் – சுவிஸ் நாட்டிலிருந்து வந்து மதவழிபாடு நடத்திய போதகர் கொரோனோ தொற்றுக்குள்ளான நிலையிலும் , அவருடன் நெருக்கமாக இருந்து இன்று கொரோனா தொற்றுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் இலக்கான நிலையிலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆராதனையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளதால் அவர்களை இனங்கண்டு பரிசோதனைக்கு உட்படுத்தும் வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.