கொரோனா தொற்று 86 ஆக உயர்வு


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையிலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இன்று (23) காலையுடன் 86 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஐவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.