யாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)

யாழ்.ஊடக மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை [19.06.2020] மாலை 4 மணிக்கு யாழ் டில்கோ விடுதியில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் எ. கமிலஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உயிர் நீத்த ஊடகவியலாளர்களுக்கான இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.

சர்வமத குருமார்களான மௌலவி ஏ ம் அஸீஸ், அருட்தந்தை இ.ரவிச்சந்திரன், நாக விகாராதிபதி ஸ்ரீ தர்ம தேரர், யாழ்.வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய பிரதம குரு ஆகியோரின் மங்கள விளக்கேற்றல் மற்றும் ஆசியுரைகளுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் தமிழ் பேசும் மக்களின் நோக்கு நிலையிலிருந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரீ. கணேசலிங்கத்தின் சிறப்புரையும் இடம்பெற்றது.

மேலும் ஊடக மன்றத்தின் நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெற்றது. இக் குழுவின் தலைவராக எ. கமிலஸும் செயலாளராக த.சுமித்தியும் பொருளாளராக ந .பரதனும் தெரிவு செய்யப்படடமை குறிப்பிடத்தக்கது

யாழ்.தர்மினி-