தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் உறுதியுரை ஏற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (Photos)

இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் 2020 இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை தொடர்ந்து இன்று (07.08.2020) காலை 11.30 மணிக்கு உறுதியுரை ஏற்பையும், அஞ்சலியினையும் செலுத்தினர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தீபம் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மேலும் மலர் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் வேட்பாளர்களான செல்வராஜா கஜேந்திரன், க.சுகாஷ்., திருமதி வாசுகி சுதாகர், க.காண்டீபன், டிலான் பத்மநாதன் ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும், செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி-