நாளை ரவிராஜ் நினைவேந்தல் இடம்பெறும்: அனைவருக்கும் சிவாஜிலிங்கம் அழைப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை 10.11.2020) காலை 09.30 மணிக்கு சாவகச்சேரி நகரில் உள்ள ரவிராஜ் உருவச் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கட்சி பேதம் இன்றி பங்குகொள்ளுமாறு அழைத்துள்ளார்.