முல்லைத்தீவில் ஒரு பாரம்பரிய விதை வைப்பகம்: முன்னாள் போராளியின் மற்றுமொரு முயற்சி (Video)

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலியில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை நிர்வகித்து வருகின்றனர்.

காலத்தின் தேவை கருதிய நேசன் அவர்களின் புதிய முயற்சியாக பாரம்பரிய விதை வைப்பகத்தையும் தொடங்கியுள்ளார்.

இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் எங்கள் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கே சென்றுள்ளன. பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நேசன் தம்பதியினர் விதைகள் காப்பகமொன்றையும் தாங்கள் பண்ணையில் ஆரம்பித்துள்ளனர்.

எமது பிரதேசங்களில் பல்வேறு வகையான மரக்கறி, மூலிகை இனங்களின் விதைகள் பாரம்பரியமாகவே இருந்து வருகின்றன. அவற்றை காலம்காலமாக எம் விவசாயிகள் பாதுகாத்து வந்துள்ளனர். இன்று பல பாரம்பரிய விதைகள் இல்லாமல் செல்லும் நிலைக்கு சென்றுள்ளன. இவற்றை பாதுகாத்து பரவச் செய்யும் நேசன் ஐயாவின் முயற்சியை வரவேற்போம்.

தான் ஆரம்பித்துள்ள பாரம்பரிய விதை வைப்பகம் தொடர்பில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றார் நேசன்,