கோண்டாவிலில் திறந்து வைக்கப்பட்ட இயற்கை வழி அங்காடி (Photos)

இயற்கை வழி இயக்கத்தின் இயற்கை வழி அங்காடி 12.01.2021 செவ்வாய்க்கிழமை மாலை பலாலி வீதி, கோண்டாவிலில் (தாயகம் கிளினிக் அருகே) உள்ள புதிய இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வழி செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்படி அங்காடியை திறந்து வைத்தனர்.

இயற்கைவழி வேளாண்மைக்குத் தேவையான கரைசல்கள், இயற்கை உரங்கள், பாரம்பரிய விதைகள், கன்றுகள் முதற்கொண்டு நஞ்சற்ற வேளாண் உற்பத்திகள் வரை சகலவற்றையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இயற்கைவழி அங்காடி’ ஆரம்ப நிகழ்வும் இணையவழிக் கலந்தாய்வும் 2018 ஆம் ஆண்டில் இயற்கைவழி இயக்கத்தின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த தொடர் கருத்தரங்குகளை முன்னின்று நடாத்திய பேராசிரியர். சிறீஸ்கந்தராஜா, அனந்தராஜ் நவஜீவன் (புதிய வெளிச்சம்), தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிஞர். பாமயன், சுந்தர்ராமன் ஐயாவுடன் மண்புழு ரவி, கஜேந்திரன், கோணேஸ் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் மூலம் பல்வேறு அனுபவ பகிர்வுகளை இயற்கை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.