கொரோனாவுக்குப் பலியான இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குரு

யாழ்ப்பாணம் – இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.