யாழில் மழையால் வெங்காய செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் வலிகாமம், வடமராட்சி பிரதேசங்களில் வெங்காய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் பகுதியிலும் கடந்த வாரங்களில் பெய்த மழையினால் வெங்காயம், புகையிலை செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனை மக்களின் வெங்காய செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அறுவடைக்கு இன்னும் 10 நாட்கள் இருந்த நிலையில், நேற்று பெய்த மழையினால் வெங்காய செய்கை முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

தற்போதுள்ள சந்தை விலைக்கு தமது செய்கையை விற்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.