மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையின் வட மாகாணத்தில் இரு நாட்களாக பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் மின் கம்பங்கள், மின் வடங்கள், (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும்.

இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.