யாழில் 50000 தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு முதலாம் கட்டமாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் சினாபார்ம் கோவிட்-19 தடுப்பூசிகள் நான்காவது நாளான இன்று வழங்கப்பட்டதுடன் நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்டம் தடுப்பூசி மருந்துகள் வார இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.

எனவே நாளைய தினம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் அரசினால் வழங்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இன்று வரை அந்த தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இன்றைய தினம் மக்கள் ஆர்வத்துடன் வந்து தமக்கான தடுப்பூசி மருந்தைப் பெற்றுக் கொண்டனர்.” என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.