பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் தாதியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பு

நாடு தழுவிய ரீதியில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறை பொது ஊழியர் ஒன்றியம் இன்று 12:00 மணியிலிருந்து 12:30 மணிவரை அரை மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் இன்று மதியம் அரை மணி நேரம் பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.

இதில் தாதிய உத்தியோகஸ்தர்கள், சிற்றூழியர்கள், குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் சுகாதார நடைமுறைகளை பேணி கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.

அனைத்து ஊழியர்களுக்கும் கொரோணா கால விசேட கொடுப்பனவு, விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் விசேட கொடுப்பனவு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலமையில் கொரோணா தடுப்பு செயலணி அமைத்தல் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு இன்று அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நோயாளர் நலன்கருதி அரை மணி நேரம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார ஊழியர் ஒன்றியம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள் – காண்டீபன்