முன்மாதிரி இளைஞர்களால் மீண்டும் தெருவுக்கு வந்த அம்புலன்ஸ்

எவ்வித பயனுமற்று நீண்ட நாட்களாக இருந்த அம்புலன்ஸ் வண்டியை திருத்தி மக்களின் பாவனைக்காக வழங்கியுள்ளார்கள் இந்த முன்மாதிரி இளையோர்கள்.

ஹம்பகா மல்வதுஹிரிபிட்டியா ஸ்வாசக்தி இளைஞர் சங்கத்தின் இளைஞர்கள் தான் மேற்படி பயனுள்ள திட்டத்தை செயற்படுத்தி உள்ளனர்.

அப்பகுதி பொலிஸாரின் உதவியுடன் பழைய அம்புலன்ஸ் என கழிக்கப்பட்ட அம்புலன்ஸ் ஒன்றை அவ்விளைஞர்கள் மீட்டெடுத்து அதனை சமூகத்தின் தாராளமான நன்கொடைகள் மூலம் சிறந்த முறையில் திருத்தம் செய்து அவர்கள் COVID19 க்கு எதிரான போராட்டத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்த இளையோருக்கு நாடெங்கிலும் இருந்து சமூக ஊடகங்கள் மூலமாகவும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நாடு முழுவதும் பல்வேறு அரச அலுவலகங்களிலும் இவ்வாறு பலவகையான வாகனங்கள் செயற்படாமலும், யாருக்கும் பயன்படாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.