ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் சேவைக்கு வட் வரி அதிகரிப்பு!- வரும் மாதத்திலிருந்து அமுல்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதம் தவிர்ந்த ஏனைய அஞ்சல் பொருட்களுக்கான வரிக் கொள்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் திருத்தப்பட உள்ளது. திருத்தப்பட்ட வரிக் கொள்கையின்படி, 150 யூரோக்களுக்கும் குறைவான அனைத்து அஞ்சல் தொகுப்புகளையும் அனுப்புபவர் வட் வரி செலுத்த வேண்டும்.

150 யூரோக்களைத் தாண்டிய அஞ்சல் தொகுப்புகளின் அனைத்து வரிகளையும் நாடுகளின் சுங்கம் பெறுநரிடமிருந்து சேகரிக்கும். இலங்கையில் வசிக்கும் ஒருவரிடமிருந்து எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் வசிக்கும் ஒருவருக்கு. அனுப்பப்படும் தனிப்பட்ட பரிசு அடங்கிய அஞ்சல் தொகுப்புகளுக்கும் இந்த வரி பொருந்தும்.

அஞ்சல் பொருட்களைப் பெறுபவர்கள் தொடர்புடைய வட் மற்றும் எல்லை வரி செலுத்த மறுத்தால் அதற்கு தாம் பொறுப்பேற்க மாட்டோம் என்று அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களை 0112 320 017 என்ற எண்ணில் தபால் திணைக்களத்திலிருந்து பெறலாம்.