அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக திரண்ட 45 சிவில் சமூக அமைப்புகள்

ஜனநாயக உரிமைகளுக்கான அடக்குமுறைக்கு எதிராக விரைவாக போராடுவோம் என்ற தொனிப் பொருளில் 45 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் குறித்த 45 அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு,

கொவிட் 19 தொற்றுநோய் நிலை காரணமாக தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அந்த சட்டம் தொடர்பாக மக்களின் கருத்துச்சுதந்திரம் மற்றும் அரசின் செயற்பாடுகள் விமர்சனத்திற்கு உட்படுத்தும் உரிமை பாதிக்கப்படும் வகையில் இலங்கை போலீஸ்/காவல்துறை எடுக்கும் நடவடிக்கையானது ஜனநாயக அதிகாரமுள்ள நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

2020, மார்ச் மாதம் தொற்று நிலை குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் இல்லாமலாக்கப்பட்டது குறித்து மக்களின் எதிர்ப்பை குறைத்து மதிப்பிட அரசானது நடவடிக்கை எடுத்ததோடு இதன் கீழ் ஒரே நாளில் நேற்று (2021 ஜூலை 07) கொடூரமான மரணத்தை நாங்கள் கண்டோம்.

விவசாயிகள் முகங்கொடுத்து வரும் பசளை தொடர்பாக பதுளையில் நடந்த பிரச்சினை, பொலந்தையில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு, அரச பொறியியலாளர் சங்கத்தில் சேவையாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமை தொடர்பாக கொழும்பு கொம்பனி வீதியில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு போன்ற அமைப்புக்களிலாலான எதிர்ப்புக்கள் பொலிஸால் இல்லாதொழிக்கப்பட்டதோடு , கொம்பனி வீதியில் கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கு கொழும்பு கோட்டை உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சட்டத்திற்கமைய கட்டாயம் இருக்க வேண்டிய மக்கள் சுகாதார அதிகாரி அல்லது அவர் அல்லாமல் பொலிஸாரால் அவர்கள் பலவந்தமாக பல்லகெலே தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

முத்துராஜவல ஈரவலய ஒழிப்பிற்கு எதிராக ஜாஎல, போபிடிய முற்சந்தியில் நடந்த எதிர்ப்பு மற்றும் பெற்றோல் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை குறைத்தல் குறித்து அரசிற்கு உறுதியான கோரிக்கை வைத்ததோடு, களுத்துறை நகரில் நடந்த எதிர்ப்பானது ஒழுங்கமைக்கப்பட்டதோடு அக்குழுவினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலும் நேற்று நடைபெற்றது.

அத்தோடு ஜூன் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்நரத்திற்கு நீதி கிடைக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன்னிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த எதிர்ப்பாளர்கள் கூட்டமொன்று கைது செய்யப்பட்டது.

ஒரே நாளில் இவ்வாறான நாசகார செயல்கள் நாடு பூராகவும் நிறைய நடந்துள்ளமை மிக மோசமான நிலைமை ஒன்றாக கருதப்படுவதோடு கவனம் செலுத்தப்படக்கூடியதொன்றாகவும் காணப்படுகிறது.இந்த சகல எதிர்ப்புக்களினதும் இலக்கானது மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு அரசானது தகுந்த நடவடிக்கை எடுக்காமல் பின்வாங்கியமை மற்றும் அந்த பிரச்சினைகளை தீவிரப்படுத்தல் தொடர்பாக அரசினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தலும் ஆகும்.

கருத்துச் சுதந்திரமானது இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தில் அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு அரசை பிரச்சாரம் செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளதானது சிரேஷ்ட நீதிமன்ற வழக்குத்தீர்ப்புக்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டு அரசியலமைப்புச்சட்டத்தில் 14(1) (அ) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “அனைத்து மக்களுக்கும் மொழி சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது.” உயர் நீதிமன்றத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்ட வழக்குத்தீர்ப்புக்களில் மொழி மற்றும் கருத்து சுதந்திரம் பற்றி இவ்வாறு குறிப்படப்பட்டுள்ளது.

வணிகசூரிய எதிரிவ பீரிஸ் (SC/FR/199/87) வழக்குத்தீர்ப்பில் காட்டப்பட்டுள்ளதானது, அறிவு பகிர்வானது மொழி சுதந்திரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாகும்.

விஜேரத்ன எதிரிவ பெரேரா (SC/FR/399/93) வழக்குத்தீர்ப்பில் காட்டப்பட்டுள்ளதானது, பிரச்சாரத்திற்கு உட்படுதல் மொழி சுதந்திரத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் ஒன்றாகும். அந்த தீர்ப்பில் மார்க் பிரனாந்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்து வேறுபாட்டை வலுக்கட்டாயமாக ஒழிக்கத்தொடங்குபவர்கள் விரைவில் தாம் எதிர்ப்பாளர்களால் அழிக்கப்படுவதை காணலாம். கருத்தை கட்டாயமாக ஒன்றிணைப்பது கல்லறை முற்றத்தின் ஒருமித்த தன்மையை மட்டுமே அடைகிறது.

இத்த ஆரம்பங்களை தவிர்ப்பதன் மூலம் இந்த முனைகளை தவிர்ப்பதற்கான முதல் திருத்தம் வடிவமைக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் கூறியது படி எதிர்ப்புக்களை பலாத்காரமாக ஒழிப்பதற்கு முயற்சி செய்தால் இந்த செயலானது கொடூரமான உயிரிழப்பில் முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கீழான (2005-2015) ஆட்சிக்காலத்தில் இவ்வாறான எதிர்ப்புச்சம்பவங்களை ஒழிப்பதற்காக செல்லும் போது பாதுகாப்பு பகுதியின் சாதாரண மக்கள் மரணித்த சம்பவங்கள் நிறைய இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள் விதிவிலக்கு கிடைக்கப்படும் நிலைமையின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியின் கீழ் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான மாநாட்டின் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மீறப்படுவதோடு மக்களை பயப்படுத்துவதற்காக, குறிப்பாக சமூக ஊடகங்களினூடாக கருத்து தெரிவிக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்து வைக்கப்படல் கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

தொற்று நிலையை கட்டுப்படுத்தல் தொடர்பாக சுகாதார அமைப்பு ஜெனரால் அவர்களினால் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட வழிகாட்டலை நடைமுறைப்படுத்தல், மக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ள நிலைக்கு எதிராக செயற்படுத்தப்படும் எதிர்ப்பை ஒழிப்பது தீவிரமான நிலைமை ஆகும்.

அங்கு இலங்கை பொலிஸாரால் சுகாதாரப்பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் வழிகாட்டலானது தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த தனிமைப்படுத்தல் சட்டமானது செயற்படுத்தப்படல் அரசின் நடவடிக்கைகளில் மற்றும் அரசிற்கு நெருக்கமான குழுக்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளில் காண முடியாமையானது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும். சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருதல், தன்னிச்சையான மற்றும் பக்கச்சார்பற்ற செயற்பாடுகளை உறுதிப்படுத்தல் போற்ற உதாரணங்கள் கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் வேகமாக வளர்ந்து வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கும், ஜனநாயக கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்று கீழே கையொப்பமிட்டவர்கள் நாங்கள் நம்புகிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் ஒன்றிணைந்து, வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் விரைவான போராட்டத்தை நடத்துவதற்கு முன்னிலை வகிக்க வேண்டும் என்று நாங்கள் மேலும் பரிந்துரைக்கிறோம்.

இதில் 45 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன.