திலீபன் நினைவுநாளில் யாழ். இளைஞர்கள் செய்த உன்னத பணி (Photo)

அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (26.09.2021)யாழ்.மண்ணைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவுக்கு நேரடியாகச் சென்று இரத்தம் வழங்கியுள்ளமை பலரதும் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியத்தை ஆழமாக நேசிக்கும் குறித்த இரு இளைஞர்களிலும் ஒரு இளைஞன் ஒன்பதாவது தடவையாகவும்,மற்றைய இளைஞன் ஆறாவது தடவையாகவும் மேற்படி நினைவேந்தல் நாளில் இரத்தம் வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:-செ. ரவிசாந்)